2024.11.09ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில், பாணந்துறை கிளை ஜம்இய்யா மற்றும் ஜாமிஉல் ஹைராத் ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகம் ஆகியன இணைந்து நடாத்திய இளைஞர்களுக்கான 'வாழ்க்கைத் திறன் வழிகாட்டல் செயலமர்வு' பாணந்துறை, அம்பலாந்துவ ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
குறித்த செயலமர்வில் அம்பலாந்துவ ஜுமுஆ மஸ்ஜித் மஹல்லாவினை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் பிரதம இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் நவ்பர் (ஹக்கானி), குழுவின் துணை இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
- ACJU Media -