2024.11.03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கேகாலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 'அன்புடன் இணைந்து அறிவோடு பயணிப்போம்' எனும் தொனிப்பொருளிலான நட்புறவு ரீதியிலான ஒன்றுகூடலில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகம் சார்பில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உப செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் மற்றும் உப பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் பஹ்ஜி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் 'சமகாலத்தில் உலமாக்களின் சமூகப் பொறுப்புக்கள் மற்றும் பணிகள்' எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
அதனையடுத்து, அகில இலங்கை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உப பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் பஹ்ஜி அவர்களால் 'உலமாக்களாகிய நாம் அல்லாஹ்வுடனான உறவை பலப்படுத்தி வாழ்வோம்' எனும் தலைப்பில் விஷேட உரையொன்று நிகழ்த்தப்பட்டது.
மேலும், இதில் ஜம்இய்யாவின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் தலைமை அதிகாரி அஷ்-ஷைக் அர்ஷத் அதாஉர் ரஹ்மான் அவர்கள் 'அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பணிகள் அறிமுகம்' எனும் தலைப்பில் விளக்கக் காட்சிகளுடனான தெளிவுகளை வழங்கினார்கள்.
குறித்த நிகழ்வில் கேகாலை மாவட்டத்தின் 10 பிரதேச கிளைகளில் இருந்தும் சுமார் 300 மேற்பட்ட ஆலிம்கள் கலந்து பயன்பெற்றனர்.
கேகாலை மாவட்ட ஜம்இய்யாவின் உறுப்பினர்கள், பிரதேசத்தின் தனவந்தர்கள், கிருங்கதெனிய ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள், மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள், ஸஹ்ரிய்யா மற்றும் இர்ஷாதிய்யா அரபுக் கல்லூரிகளின் மாணவர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இந்நிகழ்வு மிக சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
- ACJU Media -