2024.07.11ஆம் திகதி, தர்கா நகர் - மீரிப்பன்ன பிரதேசத்தில் அல்-குர்ஆன் மத்ரஸா ஒன்றினை தொடங்குவது குறித்து கலந்துரையாடுவதற்காக மீரிப்பன்ன ஜுமுஆ பள்ளிவாயல் நிர்வாகிகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்து பொதுச்செயலாளர் அவர்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.
இதன்போது, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் அல்-குர்ஆன் மத்ரஸா தொடர்பிலான ஜம்இய்யாவின் வழிகாட்டல்கள் குறித்து விளக்கங்களை வழங்கியதோடு மத்ரஸா பாடத்திட்டங்கள், முஅல்லிம்களுக்கான பயிற்சிகள் தொடர்பிலும் தெளிவுகளை வழங்கினார்கள்.
- ACJU Media -