ACJU/FRL/2024/16/399
2024.06.14 (1445.12.07)
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
துல்ஹிஜ்ஜஹ் ஒன்பதாம் நாளில் நோற்கப்படும் அறபா நோன்பு தொடர்பாக ஹதீஸ்களில் பல சிறப்புகள் வந்துள்ளன.
'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அறபாவுடைய நாளில் நோற்கப்படும் நோன்பு பற்றிக் கேட்கப்பட்ட போது, அது முன்னைய ஓர் ஆண்டிற்கும் பிந்திய ஓர் ஆண்டிற்கும் பாவப்பரிகாரமாக அமையும்' என்று கூறினார்கள். (ஸஹீஹு முஸ்லிம் - 1162)
எமது நாட்டில் இவ்வருடம் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் ஒன்பதாவது தினம் எதிர்வரும் 2024.06.16 ஆம் திகதி (ஹிஜ்ரி 1445.12.09) ஞாயிற்றுக் கிழமையாகும்.
அல்லாஹு தஆலா நம்மனைவருக்கும் அறபா தின நோன்பை நோற்று அதன் சிறப்புக்களை அடைந்து கொள்வதற்கு அருள்புரிவானாக!
'இலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்' எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஜம்இய்யாவின் வழிகாட்டலை பின்வரும் இணைப்பினூடாக பார்வையிடலாம்.
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்
பதில் செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா