அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினால் வெலிகந்த - கந்தக்காடு மற்றும் வவுனியா - பூந்தோட்டம் பகுதிகளில் உள்ள புனர்வாழ்வு மையங்களில் நடாத்தப்பட்ட வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வுகள்

மே 31, 2024

2024.05.29ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினால் வெலிகந்த - கந்தக்காடு மற்றும் வவுனியா - பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள புனர்வாழ்வு மையங்களில் சிகிச்சை பெற்றுவருவோருக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வுகள் சிறப்பாக நடாத்தப்பட்டன.

இதில் பொலன்னறுவை மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். அலாப்தீன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்நிகழ்வுகளில் வளவாளர்களாக ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான் மற்றும் இளைஞர் விவகாரக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

- ACJU Media -

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.