அஷ்-ஷைக் ஏ.எம். அன்சார் தப்லீகி (اللهم اغفر له وارحمه) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச்செய்தி

மே 31, 2024

ACJU/NGS/2024/342
2024.05.31 (1445.11.22)

 

கல்முனை – சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்த அஷ்-ஷைக் ஏ.எம். அன்சார் தப்லீகி (اللهم اغفر له وارحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் கடந்த வியாழக்கிழமை 2024.05.30 ஆம் திகதி வபாத்தானார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர்கள், சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வியைப் பயின்று அல்-ஆலிம் பட்டம் பெற்றதுடன் 1990ஆம் ஆண்டு அரசாங்க ஆசிரியர் நியமனத்தையும் பெற்று சம்மாந்துறை மத்திய கல்லூரி, கல்முனை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் நீண்டகாலம் கல்விப்பணியாற்றியதுடன் அஹதிய்யாப் பாடசாலை அதிபராகவும் கடமையாற்றினார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - மாளிகைக்காடு கிளையின் உப தலைவராகவும் சம்மாந்துறை அல்-ஃபத்தாஹ் பள்ளிவாசலில் பிரதம இமாமாகவும் தனது இறுதிவரையில் கடமையாற்றியதுடன் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை சமய, சமூக மற்றும் கல்விப் பணிகளுக்காகவே அர்ப்பணித்தார்.

இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு சார்பிலும், அனைத்து ஆலிம்கள் சார்பிலும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லாஹு தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களுடைய குற்றங் குறைகளை மன்னித்து பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக!

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onவெள்ளிக்கிழமை, 31 மே 2024 06:40

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.