2024.05.06ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் (செவிப்புலனற்றோர்) குழுவொன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு ஜம்இய்யாவின் பொதுச் செயலாளருடன் சிநேகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டனர்.
இதில் மாற்றுத்திறனாளிகளது முன்னேற்றத்திற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவர்களது மார்க்க மற்றும் சமூக தேவைகளை ஜம்இய்யாவின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அமைத்துக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் சைகை மொழியினடிப்படையில் அல்-குர்ஆனை விளக்குதல் மற்றும் மார்க்க விடயங்களை அறிந்துகொள்ளல் குறித்தும் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் ஜம்இய்யா சார்பில் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் ஆலிம்கள் விவகாரக்குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் பவாஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- ACJU Media -