ரமழான் மாதத்தில் வித்ருத் தொழுகையில் குனூத்தை நீட்டுவது மக்ரூஹ் என்று கூறப்பட்டுள்ளது. இதனுடைய சட்டம் என்;ன? நீட்டுவதாயின் எவ்வளவு நேரம் நீட்டலாம். நபிலான தொழுகையிலும் இமாம் நோயாளிகளை கவனித்து குனூத்தை சுருக்கிக் கொள்வது கட்டாயமா? அல்லது மக்கள் அனைவரும் குனூத்தை நீட்டுவதை விரும்பினால் மக்ரூஹ{டைய சட்டம் நீங்கி விடுமா என்ற பூர்த்தியான ஒரு வழிகாட்டலை எதிர்பார்க்கின்றேன். 

பதில் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

 

ரழமான் வணக்க வழிபாடுகளுடைய மாதமாகும். அதன் இரவுகளை தொழுகையில் நீண்ட கிராஅத்துகளைக் கொண்டு கியாம்களை (நிலையில் நிற்பதை) நீட்டுவது சுன்னத்தாகும். மேலும், அம்மாதத்தின் இரண்டாவது அரைப்பகுதியில் வித்ருத் தொழுகையில் குனூத் ஓதுவதும் சுன்னத்தாகும்.

 

இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

 

“தராவீஹ் தொழுகையை மக்கள் தனித்துத் தொழுது கொண்டிருந்த சமயம் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழும்படி ஏவி, உபய் இப்னு கஅப் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொழுகையை நடாத்தும்படி ஏவினார்கள். அவர்கள் ரமழானின் இரண்டாவது அரைப் பகுதியில் வித்ருத் தொழுகையில் குனூத்தை ஓதியுள்ளார்கள்.” இவ்விடயம் அபூதாவூத் எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.[1]

 

றமழான் மாதத்தின் கடைசிப் பகுதியில், வித்ருடைய தொழுகையில் குனூத் ஓதுவது சுன்னத் என்று அதிகமான மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர். இக்கருத்து இஜ்மாஃ வைப் போன்று என்று இமாம் இப்னு குதாமா றஹிமஹுல்லாஹ் கூறுயுள்ளார்கள். 

 

பொதுவாக, குனூத்தில் ஓதப்பட வேண்டிய துஆக்கள் சம்பந்தமாக இரண்டு அறிவிப்புக்கள் வந்துள்ளன.

 

ஹஸன் இப்னு அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு வித்ருடைய குனூத்தில் ஓதக் கூடிய பின்வரும் சில கலிமாக்களைக் கற்றுத் தந்தார்கள்.

 

“اللَّهُمَّ اهْدِني فِيمَنْ هَدَيْتَ، وعَافِني فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلّني فِيمَن تَوَلَّيْتَ، وبَارِكْ لِي فِيما أَعْطَيْتَ، وَقِني شَرَّ ما قَضَيْتَ، فإنَّكَ تَقْضِي وَلا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنا وَتَعالَيْتَ”. (سنن الترمذي)

(நூல்: அபூதாவுத் - 1425. திர்மிதி - 464)

 

மேலும், உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களது அறிவிப்பில் பின்வரும் துஆ பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

"اللَّهُمَّ إنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَلاَ نَكْفُرُكَ، (اللهم إنا نستعينك ونستغفرك ونستهديك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله نشكرك ولا نكفرك) وَنُؤْمِنُ بِكَ وَنَخْلَعُ (ونترك) مَنْ يَفْجُرُكَ، اللَّهُمَّ إيَّاكَ نَعْبُد، ولَكَ نُصَلِّي وَنَسْجُد، وَإِلَيْكَ نَسْعَى وَنحْفِدُ، نَرْجُو رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ، إنَّ عَذَابَكَ الجِدَّ بالكُفَّارِ مُلْحِقٌ. اللَّهُمَّ عَذّبِ الكَفَرَةَ الَّذِينَ يَصُدُّونَ عَنْ سَبِيلِكَ، ويُكَذِّبُونَ رُسُلَكَ، وَيُقاتِلُونَ أوْلِيَاءَكَ. اللَّهُمَّ اغْفِرْ للْمُؤْمِنِينَ وَالمُؤْمِناتِ والمُسْلِمِيَن والمُسْلِماتِ، وأصْلِح ذَاتَ بَيْنِهِمْ، وأَلِّفْ بَيْنَ قُلُوبِهِمْ، وَاجْعَلْ فِي قُلُوبِهِم الإِيمَانَ وَالحِكْمَةَ، وَثَبِّتْهُمْ على مِلَّةِ رَسُولِ اللَّهِ صلى اللّه عليه وسلم، وَأَوْزِعْهُمْ أنْ يُوفُوا بِعَهْدِكَ الَّذي عاهَدْتَهُمْ عَلَيْهِ، وَانْصُرْهُمْ على عَدُّوَكَ وَعَدُوِّهِمْ إِلهَ الحَقّ وَاجْعَلْنا مِنْهُمْ. (سنن البيهقي 2ஃ211 - باب دعاء القنوت)

 

குனூத்தில், ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ள துஆக்களை ஓதுவதே சிறந்தது என்பதால், மேற்கூறப்பட்ட இரண்டு துஆக்களில் ஏதாவது ஒன்றை ஓதுவது மிகவும் ஏற்றமானதாகும். தனித்துத் தொழுவதாக இருந்தால் அல்லது ஜமாஅத்தாகத் தொழும்போது மஃமூம்கள் விரும்பினால் மேற்கூறப்பட்ட இரண்டு துஆக்களையும் ஓதலாம். இரண்டு துஆக்களில் ஒன்றை ஓதுவதாக இருந்தால் اللهم اهدنا  என்று ஆரம்பிக்கும், ஹஸன் இப்னு அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் துஆவை ஓதுவது சிறந்ததாகும்.

 

மேலும், ஹதீஸ்களில் இடம்பெறாத மக்களுக்குத் தேவையான விடயங்களையும் குனூத்தில் துஆவாகக் கேட்கலாம் என்று இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது அல்-மஜ்மூஉ எனும் கிரந்தத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.[2]

 

அத்துடன், தொழுகையில் முதலாவது அத்தஹிய்யாத் உடைய இருப்பில் உட்காரும் அளவை நீட்டுவது மக்ரூஹ் என்பது போன்று குனூத்தையும் அளவுக்கதிகம் நீட்டுவது மக்ரூஹ் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.[3]

 

எனவே, ரமழானின் கடைசி அரைப் பகுதியில் வித்ரு தொழுகையில் ஓதப்படும் குனூத்தை அளவுக்கு அதிகமாக நீட்டி ஒதுவது (மக்ரூஹ்) வெறுக்கத்தக்க விடயம் என்பதால், குனூத்தை அளவுக்கு அதிகமாக நீட்டாமல் சுருக்கமாக ஓதிக் கொள்வது சிறந்ததாகும். அதே போன்று இதற்காகவே பிற ஊர்களில் இருந்து ஆலிம்களை வரவழைப்பது பொருத்தமற்றதாகும்.

 

மேலும், றமழானுடைய காலத்தில் ஓதப்படும் குனூத்;தில் சிறமப்பட்டு அளவு கடந்து ராகம் எடுத்தல், தொழுகையை பாதிலாக ஆக்கும் அளவுக்கு அழுதல் போன்றவைகள்  நடைபெருவதையும் அவதானிக்க முடிகின்றது. இவைகளும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்               

செயலாளர், பத்வாக் குழு                          

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா           

      

அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி

மேற்பார்வையாளர் - பத்வாப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்  

பொதுச் செயலாளர்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்,           

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

 

[1]  قال النووي رحمه الله فى المجموع : (المذهب أن السنة أن يقنت في الركعة الأخيرة من صلاة الوتر في النصف الأخير من شهر رمضان، وهذا هو المشهور في المذهب، ونص عليه الشافعي رحمه الله؛ وفي وجه يستحب في جميع شهر رمضان، وهو مذهب مالك، ووجه ثالث أنه يستحب في الوتر في جميع السنة)

 

[2]  قال : " قال أصحابنا : يستحب الجمع بين قنوت عمر رضي الله عنه وبين ما سبق فإن جمع بينهما فالأصح تأخير قنوت عمر , وفي وجه يستحب تقديمه وإن اقتصر فليقتصر على الأول , وإنما يستحب الجمع بينهما إذا كان منفردا أو إمام محصورين يرضون بالتطويل والله أعلم"  (المجموع (3/478)

 

[3]  " قال في المجموع عن البغوي : وتكره إطالة القنوت كالتشهد الأول ، وقال القاضي حسين : ولو طَوَّلَ القنوت زائدًا على العادة كُره ". مغني المحتاج

 

فَقَدْ قَالَ الْقَاضِي لَوْ طَوَّلَ الْقُنُوتَ الْمَشْرُوعَ زَائِدًا عَلَى الْعَادَةِ كُرِهَ وَفِي الْبُطْلَانِ احْتِمَالَانِ وَقَطَعَ الْمُتَوَلِّي وَغَيْرُهُ بِعَدَمِهِ لِأَنَّ الْمَحَلَّ مَحَلُّ الذِّكْرِ وَالدُّعَاءِ وَبِهِ مَعَ مَا يَأْتِي فِي الْقُنُوتِ لِغَيْرِ النَّازِلَةِ فِي فَرْضٍ أَوْ نَفْلٍ يُعْلَمُ أَنَّ تَطْوِيلَ اعْتِدَالِ الرَّكْعَةِ الْأَخِيرَةِ بِذِكْرٍ أَوْ دُعَاءٍ غَيْرُ مُبْطِلٍ مُطْلَقًا لِأَنَّهُ لَمَّا عُهِدَ فِي هَذَا الْمَحَلِّ وُرُودُ التَّطْوِيلِ فِي الْجُمْلَةِ اسْتَثْنَى مِنْ الْبُطْلَانِ بِتَطْوِيلِ الْقَصِيرِ زَائِدًا عَلَى قَدْرِ الْمَشْرُوعِ فِيهِ بِقَدْرِ الْفَاتِحَةِ، (تحفة المحتاج,باب صفة الصلاة)