அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
- பத்வா ஹொட்லைன் - 0117 490 420
- பத்வா மின்னஞ்சல் - fatwa@acju.lk
- பத்வா பிரிவு - 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10
வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஜம்இய்யா அலுவலகம் திறந்திருக்கும். வாரஇறுதி நாட்களிலும் வணிக விடுமுறை தினங்களிலும் ஜம்இய்யா அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.
1) “தீனுல் இஸ்லாம்” எனும் இஸ்லாம் மார்க்கத்தை மேம்படுத்தலும், பாதுகாத்தலும்.
2) பொதுவில் முஸ்லிம் சமூகத்தினரிடையேயும், விஷேடமாக ஆலிம்களுக்கிடையேயும் ஒற்றுமையை நிலைநாட்டி, மேம்படுத்துதல்.
3) இஸ்லாமிய வழியில் முஸ்லிம்களின் கலாசார, சமூக மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்துதல்.
4) முஸ்லிம்களும், ஏனைய சமயங்களைப் பின்பற்றும் ஆட்களும் இஸ்லாம் குறித்து நன்கு விளங்கிக்கொள்ளும் நோக்கத்துடன் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் நூற்கள், பருவ வெளியீடுகள், சஞ்சிகைகள் என்பவற்றை வெளியிடுவதுடன், சகல வசதிகளும் அடங்கிய நூல்நிலையம் ஒன்றை அல்லது பலவற்றை நிறுவுதலும்.
5) அரபு மொழி, இஸ்லாமிய சரீஆ கற்கைகளை மேம்படுத்தல்.
6) உள்ளக இன ஒற்றுமையை மேம்படுத்தல்
7) ஜம்இய்யாவின் கிளைகளை இலங்கையின் ஒவ்வொரு நிருவாக மாவட்டத்திலும் நிறுவுதல்.
8) ஜம்இய்யாவின் குறிக்கோள்களை எய்துவதற்குத் தேவையானதும் அல்லது இடைநேர்விளைவானதுமான வேறு எல்லாச் செயல்களையும் கருமங்களையும் செய்தல்.